
கூடலூர் டிச 11,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளர் கிராம பகுதியில் புதிதாக நான்கரை கோடி செலவில் 2500 மெட்ரிக் டன் அரிசி கொள்ளளவு கொண்ட புதிய செயல்முறை கிடங்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் தொகுதி மேற்பார்வையாளர் குமார். கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரன். பந்தலூர் தாசில்தார் சர்புதீன் நிஷா. சிவில் சூப்பர்வைசர் குணசேகரன் .செயற்குழு உறுப்பினர்கள் திராவிட மணி. காசிலிங்கம். பொதுக்குழு உறுப்பினர் அமைதலிங்கம். நெல்லியால நகர மன்ற தலைவி சிவகாமி. துணை தலைவர் நாகராஜன். மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் .பந்தலூர் நகர செயலாளர் சேகரன். துணை செயலாளர் சிவசுப்பிரமணி. பொருளாளர் தென்னரசு. கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன். பந்தலூர் மத்திய ஒன்றிய செயலாளர் மாங்கோடு ராஜா. கூடலூர் ஒன்றிய செயலாளர் உத்தமன். மாவட்ட பிரதிநிதிகள். குமார். நாகராஜ் கணபதி. துணை செயலாளர் பாக்கியநாதன் அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நுகர்வோர் வணிக வியாபாரி அன்பர்கள் பொதுமக்களை என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் அரசு கொறடா ராமச்சந்திரன் குத்துவிளக்கை ஏற்றினார் பின்பு பத்திரிக்கையாளரிடம் அவர் பேசுவையில் நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலமாக பந்தலூர் நெல்லியாள கிராம பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த குடோனை தமிழக முதல்வர் தலைவர் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்துள்ளார்கள் .இந்த குடன் என்பது இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று இது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது இன்று நான்கரை கோடி ரூபாய் செலவில் இந்த குடோன் இங்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2500 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்டது. கிட்டத்தட்ட 44 ரேஷன் கடைகளுக்கு இங்கு இருந்து வாணிபக் கிடங்கில் கொடுக்கக்கூடிய பொருட்கள் அனைத்து கடைகளுக்கும் போகும் இதில் 44 கடைகளில் ஏறக்குறைய 30 ஆயிரத்து 444 ரேஷன் அட்டைகள் இதில் அடங்கும் அத்தனை குடும்பங்களுக்கும் இன்று முதல் இந்த குடோனில் இருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல பணிகள் மேற்கொள்ளப்படும் .சிறப்பாக பணியை செய்து கொடுத்த முதலமைச்சர்களுக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அவருக்கு கூறினார்














Leave a Reply