
பென்னாகரம், நவ. 9 –
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 4,000 கன அடியாக வந்துள்ளதை தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதை தொடர்ந்து தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பரிசல் சவாரி செய்தும், எண்ணெய் மசாஜ் செய்தும், அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளித்தும் சுற்றுலாவை உற்சாகமாக கொண்டாடினர்.
பரிசல் இயக்க அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளும், பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.














Leave a Reply