Categories

வள்ளிமதுரை (வரட்டாறு) அணை பூங்கா சிதிலமடைந்து பூட்டி கிடக்கும் அவலம் – ராமசந்திரன் பேட்டி

பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத நிலையில்,
வள்ளிமதுரை (வரட்டாறு) அணை பூங்கா

பராமரிப்பின்றி சிதிலமடைந்து பூட்டிய நிலையில் கிடக்கும் அவல நிலை



தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே
வள்ளிமதுரையில் பொதுப்பணித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்கா, நிதி ஒதுக்கீடின்மை காரணமாக பயன்பாட்டின்றி கிடக்கிறது.

சித்தேரி மலை அடிவாரத்தில் அமைந்த வள்ளிமதுரை அணைக்கு அருகில் இருந்து, பூங்கா வளாகம் மது அருந்துபவர்களின் கூடாரமாகவும், சமூக விரோதச் செயல்களுக்கான இடமாகவும் மாறியுள்ளது.  இதனால்
சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்



பல ஆண்டுகளாக இப்பூங்காவை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என கோருகின்றனர்.
2005இல் கட்டப்பட்ட 34 அடி உயரமுள்ள இந்த இளைய அணை, 110 ஹெக்டேர் சதுப்பு நிலங்களையும் 1,047 ஹெக்டேர் வறண்ட நிலங்களையும் பாசனம் செய்கிறது;
ஆனால் பூங்கா பழுதுபார்க்கப்படாமல் இரும்புப் பொருட்கள் துருப்பிடித்து, சிலைகள் உடைந்து,  ஆக்கிரமித்துள்ளது.

வள்ளி மதுரை தர்மகர்த்தா ராமச்சந்திரன் கூறுகையில், “அரூரிலிருந்து 6 கி.மி. தொலைவில் அழகிய இயற்கை சூழலுடன் உள்ளது; பராமரிப்பின்மை காரணமாக பயன்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
“படகு இல்லம்  அமைக்கலாம்; சுற்றுலா மேம்பாடு கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும்” என்றார்.

நிறைவேறாத நிலையில் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் பூங்காவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைத்து பொழுதுபோக்கிடமாக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் வலியுறுத்துகின்றனர்.

பேட்டி
ராமச்சந்திரன்