
தர்மபுரி பிப் 19,
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே, பட்டியல் சமூக மற்றும் பழங்குடி மக்களின் நலனைப் பாதுகாக்கத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து பாஜக தர்மபுரி மாவட்ட பட்டியல் அணி சார்பாக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தலைவர் தொல் திருமாவளவனை ஒருமையில் விமர்சித்ததால் (விசிக) பாஜக இரு கட்சிகளிடையே கடுமையான வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு சாலை மறியல் நடைபெற்றது,
போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

பாஜக மாவட்டத் தலைவர் சி. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், என்டிஎ கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு திமுகவுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
சரவணன் உரையில், தனது கூட்டணியில் இருந்தபடி பட்டியல் மக்களுக்கு நேரும் கொடுமைகளைப் பொருட்படுத்தாமல் பேசுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவனை அரைவேக்காடு என விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் பாஜகவினரை கண்டித்து
விசிகவினர் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர்..

காவல்துறையின் முழுமையான கவனமின்மை காரணமாக மோதல் தீவிரமடைந்து சுமார் ஒரு மணி நேரம் பதற்ற நிலை நீடித்தது.
வாக்குவாதத்தின்போது சில காவலர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு கூறிய காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாரை பாஜக மாவட்ட தலைவர் சரவணன் கண்டித்தார்.

காவல்துறை பொறுப்பின்மை ?
ஆர்ப்பாட்டத்தின் போது காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் குறைந்தபட்ச காவலர்கள் மட்டுமே இருந்ததால் இம்மோதலைத் தடுக்க முடியவில்லை. பாஜகவினர், திமுக-விசிக -வுக்கு எதிராகக் கோஷமிட்டனர்
காவல்துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் எங்கு சென்றார்கள் என பாஜகவினர் கேள்வி எழுப்பினர்.
அரூர் பகுதியில் ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கோரிக்கை
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கும் சமயங்களில் காவல்துறை உரிய நேரத்தில் விழித்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். .

போக்குவரத்து பாதிப்பு,
பொதுமக்கள் சிரமம்,
காவலர் காயம் போன்றவற்றைத் தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் சட்டப்படி அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.













Leave a Reply