
தர்மபுரி அக் 14,
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார்
அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்கள் கூட்டரங்கம் இருளில் மூழ்கியது. இதனால் விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் மின்சாரம் வந்த பிறகு பேசிய அமைச்சர் ப.ராஜ்குமார், “நான் பேசிக்கொண்டிருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யாரோ சதி செய்கிறார்கள்” என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார்.
அமைச்சரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி மண்டலம் சார்பில் வழித்தடம் நீட்டிக்கப்பட்ட அரசுப் பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்களை வழங்கினார்.














Leave a Reply