
தர்மபுரி அக் 23,
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே பலத்த மழை மற்றும் புயல் காற்றின் காரணமாக, வீட்டின் மீது புளியமரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில், வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு மகன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சின்னாறு டேம் பகுதியில் சண்முகம் என்பவர் தனது மனைவி கலைவாணி மற்றும் இரண்டு மகன்களுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வரும் சின்னசாமி, சம்பவத்தின்போது வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் பலத்த மழையுடன் புயல் காற்று வீசியுள்ளது.
அப்போது, நள்ளிரவில் வீட்டின் அருகே இருந்த புளியமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து, வீட்டின் கூரை மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணி மற்றும் அவரது இரு மகன்களும் எந்தவித உயிர்ச் சேதமுமின்றி உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கலைவாணி கூறுகையில், ஏற்கனவே இதே புளியமரத்தின் கிளை வீட்டின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும், தங்களது வீட்டின் அருகிலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகிலும் இதேபோன்று ஆபத்தான நிலையில் பத்துக்கும் மேற்பட்ட புளியமரங்கள் இருப்பதாகவும்,
அவை எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, உயிரிழப்பு ஏற்படும் முன்பாக, குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைவாணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம்
செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772














Leave a Reply