Categories

பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தில் விவசாயிகள் மண்புழு வளர்ப்பு குறித்து பயிற்சி



தர்மபுரி அக் 28,
தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தில் வேளாண்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு குறித்து  பயிற்சி நடந்தது.

இப்பயிற்சியில்  துணை வேளாண்மை அலுவலர் முருகன் பயிற்சிக்கு தலைமை தாங்கி விளைநிலங்களை பாதுகாப்போம் இயக்கத்தின் கீழ் காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை, பயிர் பல்வகைப்படுத்துதல், வறட்சியை தாங்கும் வகைகள், வேளாண் காடுகள், நுண்ணீர்ப் பாசனம் ஆகிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் மண்புழு உரத்தின் பயன்கள் குறித்து விளக்கினார். தவெக
கிருஷ்ணன் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் (மேற்கு) இப்பயிற்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்பகுதி  உதவி வேளாண்மை அலுவலர் விஜயன் பயிற்சியில் உயிர் உரங்களின் பயன்கள், தேசிய பயறு வகை தற்சார்பு இயக்கம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மானியம் வழங்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
முன்னோடி விவசாயி ரங்கநாதன் இப்பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் தங்கள் வயல்களில் கிடைக்கும் மட்கக்கூடிய வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி தரமான மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளிக்கத்தார். மண்புழு உரம் தயாரிப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தல், மண்புழு வளர்ப்புப் படுக்கை அமைத்தல், ஏற்ற மண்புழு இனங்களைத் தேர்வு செய்தல், மாட்டுச் சாணம் மற்றும் பயிர்க் கழிவுகளை முறையாகப் பயன்படுத்துதல், ஈரப்பதத்தைப் பராமரித்தல் மற்றும் உரம் தயாரிக்கும் காலம் ஆகியவை குறித்துவிவசாயிகள் தங்கள் வயல்களில் கிடைக்கும் மட்கக்கூடிய வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி தரமான மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மண்புழு உரம் தயாரிப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தல், மண்புழு வளர்ப்புப் படுக்கை அமைத்தல், ஏற்ற மண்புழு இனங்களைத் தேர்வு செய்தல், மாட்டுச் சாணம் மற்றும் பயிர்க் கழிவுகளை முறையாகப் பயன்படுத்துதல், ஈரப்பதத்தைப் பராமரித்தல் மற்றும் உரம் தயாரிக்கும் காலம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் மற்றும் உழவன் செயலி பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் அருள்குமார் மேற்கொண்டார். மேலும் இப்பயிற்சியில் அப்பகுதி கிராம விவசாயிகள் 40க்கும் மேற்பட்டோர் பயிற்சி வகுப்பில்  கலந்து கொண்டனர்.


தருமபுரி  மாவட்ட
செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772