Categories

பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில்  சாலை விழிப்புணர்வு பேரணி



தர்மபுரி அக் 28,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி கோட்டப்பொறியாளர் அகிலா தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாலக்கோடு உட்கோட்ட பொறியாளர் அருட்செல்வம், உதவிப்பொறியாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தார்.


இந்த பேரணியானது பாலக்கோடு உட்கோட்ட அலுவலகத்திலிருந்து, வட்டார வளர்ச்சி அலுவலகம், தக்காளி மார்கெட்,  புறவழிச் சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பஸ் நிலையம், கடைவீதி,  காவல் நிலையம்,  வெள்ளிசந்தை நான்குவழி சந்திப்பு மொரப்பூர் சாலை , மின்சார வாரியம் வரை பேரணி நடைபெற்றது.

இதில் தலைக்கவசம் உயிர் கவசம், வளைவில் முந்தாதே,  மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதே, மித வேகம் மிக நன்று, சாலையில் சாகசம் வேண்டாம் என பதாகை ஏந்தி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்,  பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தருமபுரி  மாவட்ட
செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772