
அரூர், அக்.29:
தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி வனச்சரகம், கோட்டப்பட்டி விரிவாக்க காப்புக்காடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
செங்கலேரி பீட் பகுதியில் உள்ள வன நிலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. சுமார் 70 சென்ட் பரப்பளவிலான வன நிலத்தை 20 பேர் ஆக்கிரமித்திருந்தனர்.
இதையடுத்து, அக்.26-ஆம் தேதி கோட்டப்பட்டி வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், களப்பணியாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் கண்டதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட வன நிலங்களை காலி செய்து ஒப்படைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்களது பட்டா நிலத்தின் ஓரத்தில் உள்ள காப்புக்காட்டின் எல்லைகள் நேரடியாக அளவீடு செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் ஆக்கிரமித்திருந்த நிலங்களை தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் உதவி வன பாதுகாவலர் (அரூர்) சரவணன் ஆகியோர், நிலத்தை ஒப்படைத்த 20 விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து இன்று பாராட்டு தெரிவித்தனர்.














Leave a Reply