Categories

LMW பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு மளிகை தொகுப்பு அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.

கோவை அக் 31,

லட்சுமி மெசின் ஒர்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில்
தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.200 மதிப்பில் சிறப்பு மளிகை தொகுப்பு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் வழங்கினார்


தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200 மதிப்பில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்வு கோவை பெரியநாயக்கன்பாளையம் லட்சுமி மெசின் ஒர்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மளிகை தொகுப்புகளை வழங்கி தொடங்கிவைத்தார். இத்தொகுப்பில் புளி, மல்லி, மிளகாய், பூண்டு, சீரகம், கடுகு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து உள்ளிட்ட 10 பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி ஆகியோர் பங்கேற்றனர்.