Categories

அரூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்; கர்ப்பிணி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம்



தருமபுரியில் இருந்து அரூர் நோக்கி வந்த அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் உட்பட 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 


அரூர் பணிமனையைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து, இன்று இரவு தருமபுரியில் இருந்து பயணிகளுடன் அரூருக்கு புறப்பட்டது. மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி அருகே உள்ள வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. 

பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து 108 அவசர ஊர்தி விரைந்து வந்து, காயமடைந்த 15 பேரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. 



இதில் பலத்த காயமடைந்த கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வளைவில்  திரும்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.