
கோவை நவ 1,
“பாட்டிலுக்கு ₹10 வாங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பா ?” – டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் ஸ்ட்ரைக் : கோவையில் மதுப்பிரியர்கள் சாலையில் படுத்து மறியல்!
தமிழகம் முழுவதும் கடைகள் பூட்டப்பட்டதா ? மது பிரியர்கள் ஆத்திரம்: மசக்காளிபாளையத்தில் சாலையில் அமர்ந்தும் படுத்தும் குடிமகன்கள் ரகளை!
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக கூடுதலாக ₹10 வசூலிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் (TASMAC) ஊழியர்கள் கடைகளைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் மதுக்கடை திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மதுப்பிரியர்கள் சாலையில் அமர்ந்தும் படுத்தும் திடீர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலி மது பாட்டில்களைச் திறந்தவெளியில் வீசுவதைத் தவிர்க்கவும், மறுசுழற்சியை ஊக்குவிக்கவும் மது பாட்டிலின் அச்சிடப்பட்ட விற்பனை விலையுடன் (MRP) கூடுதலாக ₹10 வசூலிக்கப்படும் என்றும், காலி பாட்டிலைத் திரும்பத் தரும் போது அந்த ₹10 தொகையை மதுப்பிரியர்களுக்கே மீண்டும் வழங்கி விடும் புதிய திட்டத்தை மதுவிலக்குத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
மேலும், இந்த ₹10 தொகையானது அரசாங்கத்தின் கணக்கிற்குச் செல்லும் என்பதால், ஊழியர்கள் கூடுதலாக ₹10 வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் MRP-யிலேயே அச்சிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த புதிய நடைமுறைக்கும், காலி பாட்டில்களைப் பெற்றுப் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் கூடுதல் பணிச்சுமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, இன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளைத் திறக்காமல் பூட்டி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் தழுவிய இந்த முடக்கத்தின் எதிரொலியாகக் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியிலும் வழக்கமாகத் திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் மதுக்கடை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.
கடை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நீண்ட நேரமாகக் காத்து இருந்த ஏராளமான மதுப்பிரியர்கள், ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் கடும் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர்.
ஆத்திரம் அடைந்த குடிமகன்கள் உடனடியாக மசக்காளிபாளையம் பிரதானச் சாலையின் நடுவே அமர்ந்தும்,
சிலர் சாலையிலேயே படுத்துக் கொண்டும்,
கடைகளை உடனடியாகத் திறக்கக் கோரியும் அசாத்தியமாகச் முழக்கமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் திடீர் கதவடைப்பால் மதுப்பிரியர்கள் சாலையில் படுத்து போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.














Leave a Reply