Categories

பி.கோடுப்பட்டி ஸ்ரீ அய்யனாரப்பன் கோயில் குடமுழுக்கு விழா


பென்னாகரம், நவ. 01:
பென்னாகரம் அருகே பி.கோடு பட்டியில் ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ வீர காரர் ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பென்னாகரம் அருகே பி கோடுபட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐயனாரப்பன்,உப தெய்வங்கள் கோயில் உள்ளது.இந்த கோயில் ஆனதே பழுதடைந்து நிலையில் கிராம மக்கள் ஒன்று இணைந்து புனேர அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.கோயில் குடமுழுக்கு விழாவானது கடந்த மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் கோ பூஜை அக்னி ஸங்கர்ணம் உள்ளிட்ட பூஜைகளுடன் கங்கணம் கட்டுதல் நிகழ்வோடு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து இரண்டாம் கால தியாக திரவியஹீதி,மகா பூர்ணாதி ,சோடச உபசார பூஜை தீபாராதனைகள் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்றாம் காலையாக பூஜை ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ வீர காரர் ஸ்ரீ கன்னிமார்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு ஸ்பாரிசாஹீதி,தீபாராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கோயிலின் மூலவர்களான ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ வீர காரர் ஸ்ரீ கன்னிமார் கோவில் கோபுரங்களுக்கு வேத விற்பன்னர் சுந்தரராஜன் சிவம் தலைமையிலான குழுவினர் கோபுர கலசங்கள்,மூலவர்களுக்கு புனித நீரூற்று கும்பாபிஷேகம் நடத்தினர்.ஸ்ரீ ஐயனாரப்பன் உள்ளிட்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.இதனைக் காண பென்னாகரம், பி.கோடு பட்டி, தாசம்பட்டி,பவளந்தூர்,கருங்கல் மேடு,இரங்காடு,சேலம் மாவட்டம் மேச்சேரி,ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.