
சரவணம்பட்டி நவ 1,
கோவை சரவணம்பட்டியில் உள்ள மதுரா பர்னிச்சர் நிறுவனம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் ஆச்சரிய பரிசை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் மதுரா பர்னிச்சர் நிறுவனத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி காலை 6மணி முதல் பகல் 11 மணி வரை வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பொருள்கள் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அவர்களுக்கு நிச்சய ஆச்சரிய பரிசு காத்திருக்கிறது அனைவரும் வாருங்கள் என்ற தகவலை கொடுத்துள்ளனர். இத்தகலின் அடிப்படையில்

நேற்று காலை 3 மணி முதலே மதுரா பர்னிச்சர் நிறுவனத்தை நோக்கி வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்து காத்திருந்தனர் அதனை தொடர்ந்து மதுரா பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதல் 200 நபர்களுக்கு டீ பாய் மற்றவர்களுக்கு வெள்ளி நாணயமும் ஆச்சரிய பரிசாக வழங்கியுள்ளனர் இதைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியோடு சென்றனர் .















Leave a Reply