
பென்னாகரம் :நவம்பர் 4.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள கா்ப்பிணிகளுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
பென்னாகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், 238 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
எஸ்.கஜேந்திரன் தலைமை வகித்தார்.
சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
238 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலை அணிவித்து, சந்தணம் பூசி, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு தாம்பூலத்தில் சீர் வழங்கப்பட்டது. மேலும் ஏழு வகையான உணவு பொருட்கள் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ் , ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்
மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்














Leave a Reply