
கோவை நவ 9,கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சுண்டாக்கமுத்தூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி, வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை உடனடியாக தடுத்து, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.














Leave a Reply