Categories

விடிய விடிய தீவிர சோதனை வேட்டையை ஆரம்பித்த மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி –  800க்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது வழக்குபதிவு

கோவை நவ 11,

மேற்கு மண்டலத்தில் 8 மாவட்டங்களில் அதிரடி ‘வேட்டை” – ஐ.ஜி ரம்யா பாரதி உத்தரவில் விடிய, விடியத் தீவிரச் சோதனை : 1,235 ரவுடிகள் தணிக்கை, 800+ பேர் மீது வழக்கு!

போதைப்பொருள் ஒழிப்பு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு, குடிபோதை வாகன ஓட்டிகள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை!

கோவை, மேற்கு மண்டல எல்லைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் (IGP) ரம்யா பாரதி, IPS மேற்பார்வையில் 8 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) தலைமையில் கடந்த 24 மணி நேரமாக (09.11.2026 முதல் 10.11.2026 வரை) அதிரடிச் சிறப்புத் தீவிரச் சோதனை (Special Drive) மேற்கொள்ளப்பட்டது.

ரவுடிகள் கண்காணிப்பு, போதைப்பொருள் தடுப்பு, முன்தண்டனைக் குற்றவாளிகள் தணிக்கை மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது அதில்
1. 1,235 முன்னாள் குற்றவாளிகள் (Rowdy Sheeters) தணிக்கை செய்யப்பட்டு
மேற்கு மண்டலம் முழுவதும் 1,235 முன்னாள் குற்றவாளிகள் நேரடியாகச் சென்று தணிக்கை செய்யப்பட்டனர்.

இதில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 36 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், 1,111 முன்னாள் குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

போதைப்பொருள் தொடர்பான முந்தைய வழக்குகளில் தொடர்புடைய 265 நபர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
இதில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய முன்தண்டனைக் குற்றவாளிகள் மற்றும் பிணையில் வெளியே வந்தவர்கள் என மொத்தம் 441 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

இதில் 4 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு மண்டலக் காவல் துறை அதிரடிச் சோதனையில்

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (Rowdies) 1,235 நபர்கள் 36 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும், (1,111 பேர் மீது நன்னடத்தை பிணையம்),
போதைப்பொருள் குற்றவாளிகள் 265 நபர்கள் 4 பேர் கைது & போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது எனவும்,
முன்தண்டனைக் குற்றவாளிகள் (கொலை/அடிதடி) 441 நபர்கள் 8 பேர் கைது செய்து (4 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டது என்றும்,
மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 684 வழக்குகள் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து,
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியவர்கள் 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் 150 வழக்குகள் அபராதம் & வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடத்தில் மது அருந்தியவர்கள் (Drone Monitoring) 786 வழக்குகள் 806 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ட்ரோன் கேமரா மூலம் தீவிரக் கண்காணிப்பு & வாகனச் சோதனையில்பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ட்ரோன் கேமராக்கள் (Drone Cameras) மூலம் தீவிரமாக ஆராயப்பட்டுச் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பொது இடங்களில் மது அருந்திய நபர்கள் மீது 786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 806 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 684 பேர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 208 பேர் மற்றும் அதிவேகமாகச் சென்ற 150 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மேற்கு மண்டல காவல்துறை சார்பில் இதுபோன்ற அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சகிப்புத்தன்மையற்ற கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவர் ரம்யா பாரதி எச்சரித்து உள்ளார்.