
கணுவாய் நவ 17,
கோவை கணுவாய் அருகே குதிரைக்கார் தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் பயந்தபடியே குரைத்து விரட்டு காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கோவை மாங்கரை, தடாகம் சுற்றுப் பகுதியில் இரவில் காட்டு யானைகள் உணவு தேடி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கோவை கணுவாய் அருகே குதிரைக்கார் தோட்டம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு வந்துள்ளது.
அந்த யானையைப் பார்த்த அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று பயந்தபடியே குரைத்து விரட்ட முயற்சித்தது. ஆனால் காட்டு யானையோ சாவுகாசமாக நடந்து வந்து அங்கு உணவு ஏதாவது உள்ளதா என தேடிப்பார்த்துவிட்டு மெதுவாக சென்றது.
சர்வ சாதரணமாக குடியிருப்பு பகுதியில் காட்டு யானை உலா வருவதும் யானையை வளர்ப்பு நாய் பயந்தபடியே குரைத்து விரட்டும் காட்சியும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.














Leave a Reply