
துடியலூர் நவ 17,
கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டி விழா விமர்சையாக நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக முருக பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர். தொடர்ந்து அனைவருக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் கடவுள் முருகனுக்கு விசேஷமான கந்த சஷ்டி விழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இந்த விழா 7 நாட்கள் நடைபெற்றது. இந்த 7 நாட்களில் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரத்தை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கடந்த 10ம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக இன்று வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கோவில் மூலஸ்தான மண்டபத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு, சீர் வரிசை தட்டுக்களுடன், யாகசாலை பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், வள்ளி தேவி வெண்பட்டும், தெய்வானை பச்சைப் பட்டும் அணிந்து மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்தனர். இதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் கோயில் முன்னாள் அறங்காவலர் பி.வி.மணி தலைமை வகித்தார். முன்னாள் அருங்காவலர் குழு உறுப்பினர்கள் அம்சவேணி பழனிச்சாமி, சுவாமிநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பேபி என்கிற உமா, சஷ்டி குழு பொருப்பாளர் கலாவதி சுப்பிரமணி, வேணி, சின்ன தங்கம், ருத்ரா, பிரபு, ரவி, மூர்த்தி, சேகர், வேலுச்சாமி, ஏ வி எம் வேல்முருகன், வெள்ளக்கிணர் செல்வகுமார், பன்னீர்மடை ரவிச்சந்திரன், தணிகைசெல்வன், மோகன சுந்தரம், விஜயகுமார், பாபு, காளிதாஸ், ஜெயபால், ராஜ்கண்ணன், சுரேஷ், சண்முகசுந்தரம், மனோகரன், விஜயகுமார், ஆடிட்டர் கிரன் ஸ்ரீ, கண்ணன் உட்பட பலர் செய்திருந்தனர்.














Leave a Reply