

உதகை நவ 26,
திமுக இளைஞரணி செயலாளரும், இளைய சமுதாயத்தின் வழிகாட்டியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா நீலகிரி மாவட்டம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உதகை அடுத்த நஞ்சநாட்டில் அமைந்துள்ள “பாப் பவுன் மெர்சி” (Bob Bowen Mercy) ஆதரவற்றோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கும் நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ். பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதகை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு மற்றும் துணை அமைப்பாளர்கள் அம்ஜத், காளீஸ்வரன், சச்சின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லத்தில் இருந்த அனைவருக்கும் அன்புடன் காலை உணவு பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் ஷாஜிமோன், கிருஷ்ணகுமார், சந்திரசேகரன், வினோத், ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.














Leave a Reply