கோவை அக் 21,

திமுக கோவை வடக்கு மாவட்டம் காரமடை நகர துணை செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருபவர் நாகநந்தினி.இவர் ஊடக விவாதங்களில் திமுக சார்பில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது செல்போனுக்கு திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிச்சு எடுத்துட்டீங்க மா நாக நந்தினி…. ஊடக விவாதங்களில் இன்னும் நிறைய கலந்து கொள்ளணும்மா.. வாழ்த்துக்கள் மா…என்றதும்,எல்லாம் உங்களது ஆசிர்வாதம் சார் என்றும்,உங்களுடன் தொண்டராக இருப்பேன் சார் என்றார் நாகநந்தினி.
திமுகவின் கடைக்கோடி தொண்டருக்கும் செல்போன் மூலமாக அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவரின் இந்த பேச்சு திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி விட்டது.மேலும்,சமீப காலமாக மேட்டுப்பாளையம் ஜென்சி திமுகவில் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply