Categories

உலகக் கோப்பை போட்டியில் கேரத்தில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை!  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!


சென்னை, டிச. 16

மாலத்தீவில் நடைபெற்ற 7-–வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த வகையில் மாலத்தீவில்  நடைபெற்ற 7–-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கீர்த்தனா, செல்வி காசிமா, செல்வி மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.  செல்வி கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், செல்வி காசிமாவுக்கு 50 லட்சம் ரூபாயும், மித்ராவுக்கு 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதை முதல்வர் வழங்கினார்.

மேலும், இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை  போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் – ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் முதல்வரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.