
கோவை டிச 14,
10.1 கிலோமீட்டர் நீளமுள்ள அவிநாசி சாலை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை தடகள விளையாட்டு வீரர்களுடன் ஓடி கடந்த முன்னாள் எம்எல்ஏ,திமுகழக தீர்மான குழு செயலாளர் நா.கார்த்திக்.

கோவை மாநகரின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை மிக நீளமாக கட்டப்பட்ட மேம்பாலம் (10.1 கிலோ மீட்டர்) நீளம் கொண்ட பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்தது வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கோவை மாவட்ட முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் அவர்கள் கோல்டு வின்ஸ் பகுதியில் தொடங்கும் இந்த மேம்பாலம் முதல் உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் அருகே நிறைவடையும் வரை தடகள விளையாட்டு வீரர்களுடன் ஓடி கடந்தார்.
இந்த நிகழ்வில் தடகள விளையாட்டு பயிற்சியாளர் வைரவன் மற்றும் தடகள விளையாட்டு வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















Leave a Reply