

கோவை நவ 16,கோவை “கார்ஸ் 327” நிறுவனம் சார்பில் யூஸ்டு கார்கள், 3வது “மெகா யூஸ்டு கார்ஸ்” மாநில மாநாடு வரும் நவம்பர் 20ம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது, கோவை அவிநாசிசாலை தொட்டி பாளையம் பிரிவு பகுதியில் நடைபெற உள்ளது.
கோவையில் யூஸ்டு கார்ஸ் வாங்க திட்டமிடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், சுமார் 1000 ற்க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களை ஒரே இடத்தில், பார்த்து வாங்கும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, 3வது “மெகா யூஸ்டு கார்ஸ்” மாநில மாநாடு வரும் நவம்பர் 20ம் தேதி அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற உள்ளது, இது குறித்து இன்று பட்டணம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த “கார்ஸ் 327 நிறுவனத்தின் நிறுவன தலைவர் விஸ்ணு வேணுகோபால் கூறியதாவது..
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் வரும் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை, 3வது மெகா யூஸ்டு கார்ஸ் மாநாடு நடைபெற உள்ளது.

காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில்,
பல்வேறு வகையான பயன்படுத்தப்பட்ட கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது தேவைக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ற காரை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. என்றார்.
மேலும், கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள், மற்றும் சிறப்பு சர்விஸ் சலுகைகள் வழங்கப்படுவதாகவும், குடும்பத்துடன் நேரில் சென்று கார்களை பார்வையிட்டு, விலை மற்றும் வசதிகளை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்துகொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார். குறிப்பாக, இது வரையிலும் சுமார் 12 யூஸ்டு கார்மேளா நடத்தி உள்ளதாகவும், இது 13 வது மேளா எனவும்,அனைத்து வாடிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும் எனவும், தமிழகத்தில் முதல் முறையாக 1000 கார்களை வைத்து இந்த கண்காட்சி நடத்த இருப்பதாகவும், நவம்பர் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை கோவை தொட்டிபாளையம் பிரிவில் நடைபெற உள்ளது எனவும், அவினாசி ரோடு “செல் பெட்ரோல் பங்க்” எதிர்புறத்தில் இந்த கார்ஸ் மேளா நடைபெற உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கார்ஸ் 327 நிறுவனத்தின் சார்பாக எங்களிடம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் சர்வீஸை இலவசமாக வழங்குவதாகவும், மேலும் கூடுதலாக பாஸ்ட்டேக் ஆயிரம் ரூபாய்க்கான ரிசார்ஜ் செய்து தருவதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட பைனான்ஸ் துறை நிபுணர்கள் உள்ளதாகவும், எனவே உங்களுக்கு எந்த வங்கியில் பைனான்ஸ் பெற வேண்டுமோ அதனை முறையாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்த விலை கார்கள் முதல் உயர்ரக கார்கள் வரை இந்த கண்காட்சியில் உள்ளதாகவும் கார்களை விற்பனை செய்ததுடன் எங்களுடைய வேலை, முடிந்ததாக இல்லை, எங்களது நிறுவனத்தில் கார்களுக்கு தேவையான ஒர்க்ஷாப்பு, பெயிண்டிங் வேலைகள், ஆக்சஸரீஸ்கள், உதிரிபாகங்கள் என அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். கார்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் முதற் கொண்டு இங்கு வாடிக்கையாளர்களுக்கு செயல்படுத்தி தருவதாகவும் அவர் கூறினார்.














Leave a Reply