
தர்மபுரி அக் 18,
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் கடைத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அபிதகுஜாம்பாள் உடனுறை ஸ்ரீ அருணேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான கொலு மண்டபத்தில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆலயப் பிரவேசம் செய்து கொலு வைத்து வழிபாடு நடத்தினர்.
பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி காணப்படும் இந்தக் கொலு மண்டபம், சமூக விரோதிகளின் கூடாரமாகவும், வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தைப் புனரமைத்துத் தரக்கோரி, பக்தர்கள் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைத்து வழிபட அனுமதி கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மண்டபத்தைச் துர்காவாகினி மாநில அமைப்பாளர் ஜெயலட்சுமி தலைமையில்,
பெருமாள் கோயிலில் இருந்து கொலு மண்டபம் வரை முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்ற அவர்கள், அங்கு ஆலயப் பிரவேசம் செய்து கொலு வைத்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்வில் விஷ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் விஷ்ணுகுமார், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண்குமார், மாவட்டத் தலைவர் சுந்தரம், மாவட்ட இணைச் செயலாளர் பூபாலன், மாவட்ட அமைப்பாளர் பெருமாள், துர்காவாகினி மாவட்ட அமைப்பாளர் ராதிகா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் பவித்ரா பூபால், ஒன்றியத் தலைவர் முருகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கொலு மண்டபத்தைப் புனரமைத்து பக்தர்களின் வழிபாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
-தர்மபுரி மாவட்ட செய்தியாளர்
முனியப்பன்














Leave a Reply