Categories

ஆதார வீடியோவுடன் அம்பலம்: பத்திரிகையாளர்களை “விலை போய்விட்டான்” என இழிவாக பேசிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அசோகன் – பத்திரிகையாளர் கடும் கண்டனம்

தருமபுரி கிழக்கு மாவட்டம் பொம்மிடியில் நடைபெற்ற அ.தி.மு.க. 55-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொறுப்பாளர் அசோகன் பேசிய பேச்சு தற்போது வீடியோ ஆதாரமாக வெளியாகியுள்ளது.

வீடியோவில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைகள்:

“பிரஸ்காரங்க, தொலைக்காட்சிக்காரங்க பூராம் விலை கொடுத்து வாங்கிட்டாங்க… போட மாட்டேங்குறான்” என பத்திரிகையாளர்களை ஒருமையிலும், இழிவாகவும் பேசியுள்ளார்.

மேலும் தற்போதைய த.வெ.க. அரசின் 100 நாள் சாதனையின்மை, விலைவாசி உயர்வு, மின்சார பிரச்சனை குறித்து பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிடாமல், நடிகர் விஜய்யின் சினிமா மோகத்தை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கண்டனம்:

ஒரு பொது மேடையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களை “விலை போய்விட்டான், போட மாட்டேங்குறான்” என ஒருமையில் பேசுவது அவை நாகரிகமற்ற, பொறுப்பற்ற செயல் என அரூர் மற்றும் தருமபுரி மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.

கோரிக்கைகள்:

வீடியோ ஆதாரத்தில் உள்ள தனது இழிவான வார்த்தைகளை அசோகன் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அ.தி.மு.க. தலைமை இவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், தருமபுரி மாவட்டம் முழுவதும் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் போராட்டம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.