
தர்மபுரி அக் 18,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு செம்மநத்தம் கிராமத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 5வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை
ஊர்கவுண்டர் சின்னபையன், மந்திரி கவுண்டர் நாகராஜன், ஊர் மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.














Leave a Reply