
கோவை அக் 12,
கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் UPI பரிவர்த்தனைக்கு மத்திய அரசு விதித்த வரியை திரும்ப பெற வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு சமிபத்தில் UPI பரிவர்த்தனைக்கு விதித்த வரியை விலக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து கோவை மாவட்ட பேரமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் இருதய ராஜா தலைமையிலும் மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலையிலும் உக்கடம் ராமர் கோவில் அனைத்து காய்கறி மார்க்கெட் முன்பாக அதன் சங்க தலைவர் காளிதாஸ் பொருளாளர் பாபு மற்றும் வணிகர் சங்கத்தின் துணைத் தலைவர் தருமராஜ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வரிவிதிப்பை நீக்க வலியுறுத்தி மத்திய அரசை கோரியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்ட போராட்டம் நடைப்பெற்றது.
மேலும் இந்த வரிவிப்பின் பாதிப்புகளை விளக்கி பிட் நோட்டீஸ் மூலமாக தெரியப்படுத்துதல் பேனர்கள் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அனைத்து வணிகர்களும் வரிவிதிப்புக்கு எதிராக பேஜ் அணிந்து இன்று வணிகம் செய்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள 90 க்கும் மேற்பட்ட அனைத்து இணைப்புச் சங்கங்களும் அவரவர் சங்கங்களிலும் வியாபார நிறுவனங்களிலும் UPI வரி விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்ட போராட்டம் நடத்தினர்.














Leave a Reply