
கோவை மே 22,
கோவை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தவெக வழக்கறிஞர் அணியினர்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விக்னேஷ் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதை கொண்டாடும் வகையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின், தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை மாநகர், மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில், தவெக வழக்கறிஞர்கள் விஷ்ணு சித்தார்த், மனோஜ்குமார், கார்த்திக், கார்த்திக் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














Leave a Reply