
*தருமபுரி, அக்.20-*
தருமபுரி கேரளா சமாஜத்தின் 25-ம் ஆண்டை முன்னிட்டு, புதிதாக பள்ளி செல்லவிருக்கும் குழந்தைகளுக்கான ‘வித்யாரம்பம்’ எனப்படும் எழுத்து அறிவித்தல் விழா, விஜயதசமி தினமான இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கோழிக்கோடு மாவட்டம், மஞ்சேரி ராஜீவ் நம்பூதிரி குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் லட்சுமி, சரஸ்வதி, பகவதி பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கை நடத்தி வைத்தனர்.
சடங்கின்போது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியால் நாக்கில் ‘ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்று எழுதி ஆசீர்வதித்தனர். பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ‘ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்றும், ‘அ’ என்ற முதல் எழுத்தையும் எழுத வைத்து ஆசீர்வதித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு எழுத்து அறிவித்தல் பெற்றனர். மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கேரளா சமாஜ சங்க தலைவர் கிருஷ்ணன் உன்னி, செயலாளர் ஹரிகுமார், பொருளாளர் சத்ய நாராயணன் உள்ளிட்ட சமாஜ உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர்.















Leave a Reply