
தர்மபுரி அக் 20,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சனத்குமார் நதியில் அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை முன்னிட்டு கங்கா பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 16-ஆம் ஆண்டு துலா தீர்த்த ரத யாத்திரையை முன்னிட்டு பாலக்கோடு சனத்குமார் நதியில் கங்கா பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாவட்டத் தலைவர், கோயில் அர்ச்சகர் சங்கர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கங்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு வேணுகோபால ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், தீபாராதனை செய்து வழிபட்ட பக்தர்கள், அன்னை காவிரியின் புனிதத்தையும், நதிநீர் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் ரதயாத்திரையைத் தொடங்கினர்.
இந்த ரதயாத்திரை ஒகேனக்கல் முதல் குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரி வரை நடைபெறுகிறது. காவிரி நதியின் புனிதத்தைக் காப்பதுடன், நதிநீர் மாசுபடுவதைத் தடுப்பது மற்றும் காவிரி நீர்வளத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த யாத்திரையின் நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியில் அகில பாரத சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், சங்கர், முருகன், நாகராஜ், ராஜசேகர், பெரியசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள், அடியார் பெருமக்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.
பக்தர்கள் அணைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
தருமபுரி மாவட்டம் செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772














Leave a Reply