Categories

அன்புமணியால் ஜாதி வாரியான கணக்கெடுப்பை நிராகரிக்கிறோம் – மு. வீரபாண்டியன் பேட்டி

தர்மபுரி டிச 8,

சாதி வாரியான கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம் ஆனால் பாமக சார்பில் வரும் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளிடமிருந்தும் ஆதரவை கோரியிருந்த நிலையில்,

பாமக தலைவர் அன்புமணி பாஜகவின் அருகில் இருப்பதால் அதன் அழைப்பை நாம் நிராகரிக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக சார்பில், மத்திய அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவினரைச் சேர்ந்த கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்து,“ஒன்றிய அரசின் ரயில் பணியாளர்கள் கோரிக்கைகள் நியாயமானவை. கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ விவகாரங்களில் ஒன்றிய அரசு நிதி வழங்கி அனுமதி வழங்க வேண்டும்.ஒன்றிய உள்துறை அமைச்சர் திமுகவை துடைத்தெறிய வேண்டும் எனக் கூறுகிறார்.

ஆனால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தூசு அல்ல. இது போன்ற பேச்சுக்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிரானவை.தமிழக முதல்வர் பிகாரில் பேசியபோது ‘நான் பிகாரியாகவே மாறி பேசுகிறேன்’ என்றார்.

அவர் இந்திய ஒற்றுமைக்கு எதிராக எந்த விதமான கருத்தும் கூறவில்லை.
இந்திய ஒற்றுமையின் இரண்டு தூண்களில் ஒன்றாக எதிர்க்கட்சிகள் இருப்பதாக டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார்.

நமது பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்தும் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்க முடியாது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக ஒன்றிய அரசு பொய் கூறுகிறது;

தமிழக அரசு பொய் கூறவில்லை.திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; எங்கள் கூட்டணியை விட தமிழக மக்களின் கலாச்சார கூட்டணி வலுவாக உள்ளது. எனவே, வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.” என தெரிவித்தார்.
போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ்அன்வர், நந்தன், பாண்டியன், சாக்கன் சர்மா , கருப்பண்ணன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்