Categories

எடப்பாடி எக்ஸ்பிரஸ் என்கிற ரயில் வேகமாக புறப்பட்டு விட்டது, அதில் பயணித்தவர்கள்  ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

எடப்பாடியார் எக்ஸ்பிரஸ் என்கிற ரயில் வேகமாக புறப்பட்டு விட்டது, அதில் பயணித்தவர்கள் அனைவரும் st. ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி



திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக,  நல்லூரில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்குவதும், திமுக அரசு பதவி ஏற்ற இந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் படும் வேதனைகளை விளக்குவதுமான தெரு முனை பிரச்சாரக் கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்னஸ் லோகநாதன் தலைமையில் பகுதி செயலாளர் வி.பி.என்.குமார் ஏற்பாட்டில் நல்லூரில் நடைைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகார் தேர்தலை போல தான் தமிழ்நாட்டில் 2026 அமையும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், திமுக என்று தீவினையான ஆட்சி கடந்தால் 4½ ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு மொத்த பணத்தையும் சம்பத் செய்த திமுக ஆட்சிக்கு மக்கள் குழி தோண்டி புதைப்பார்கள், SIR குறித்து ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்கள் ஆனால் அதற்கு பாடம் புகட்டும் வகையில் பீகாரில் பிஜேபி கூட்டணிக்கு அமோக வெற்றி அடையச் செய்தார்கள், அதே போல தமிழகத்தில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி மலரும் கூட்டணிக் கட்சியினரும் வெற்றியடைவார்கள் என்றும், எடப்பாடியார் எக்ஸ்பிரஸ் என்கிற ரயில் வேகமாக புறப்பட்டு விட்டது, அதில் பயணித்தவர்கள் அனைவரும் st. ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள், இதில் ஏறாமல் நின்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். மேலும் வாக்காளர் சீர்திருத்தத்தை மக்கள் மிகவும் வரவேற்பதாகவும், கள்ள ஓட்டு போடுவது திமுகவிற்கு கைவந்த கலை சீர்த்திருத்தம் செய்தால் திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால் ஸ்டாலின் அலறுகிறார், நல்ல வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும், மீண்டும் அம்மா ஆட்சி மலரும், எடப்பாடியாரின் அலை தமிழகத்தில் வீச தொடங்கியுள்ளது, 178 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார், செல்லும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றும், தமிழகத்தில் கடந்த 4½ அந்த காலம் எதுவும் செய்யாமல் முடிகின்ற தருவாயில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அன்புச்சோலை போன்றவற்றை நடத்துகிறார், எப்பொழுது திமுக ஆட்சி கலைகிறதோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் அதற்கு தான் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கள்ள ஓட்டு போடுவதில் கைதேர்ந்து இருப்பவர்கள் திமுக என்று பேட்டி அளித்தார்.

பேட்டி : பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் துணை சபாநாயகர்