
விழுப்புரம் டிச 6,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் திருவெண்ணெய்நல்லூர் தாலுக்கா T.புதுப்பாளையம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆதி நடராஜன் தலைமையில் அனுஷ்டிப்பு.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9வது ஆண்டு நினைவுநாள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்ப்பாளையம் ஊராட்சியில் மாவட்ட செயலளார் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு,ஒன்றிய செயலாளர் இராமலிங்கம் வழிகாட்டுதல் படி கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன் நடராஜன் ஏற்பாட்டில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னாள் ஊராட்சி தலைவர் ஆதி நடராஜன் தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பலராமன்,மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வெங்கடேசன் , கிளை கழக செயலாளர் முருகன் , முன்னாள் கிளை கழகச் செயலாளர் ராமு , மாவட்ட எம்ஜிஆர்இளைஞர் இணைச் செயலாளர் ரவி, மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வெங்கடராமன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர்பிரியா ராஜேஷ், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சஞ்சீவி,ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர் ஐயப்பன், ஒன்றிய மகளிர் அணி பொருளாளர் புஷ்பா முருகன், கிளை கழக செயலாளர், மணிகண்டன் பூத் ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம்,முன்னாள் பொருளாளர் ஏழுமலை, அவைத்தலைவர் ஆறுமுகம், முன்னாள் அவைத்தலைவர் உலகநாதன்,கிளைக் கழக செயலாளர் அருள், ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் பஞ்சவர்ணம் முனியன் மற்றும் ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.














Leave a Reply