
தர்மபுரி, பிப்ரவரி 7:
தர்மபுரி அருகே சவுலூபட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் மணிமாறன், இலக்கியம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவராகப் படித்து வருகிறார். இந்நிலையில், ஒரு ஆசிரியை மாணவரை பிரம்பால் அடித்ததாகக் கூறி, பள்ளியின் சிசிடிவி பதிவைத் தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் செய்தியாகப் பரப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் பள்ளிக்கல்வித்துறையின் சட்ட விதிகளான தமிழ்நாடு பள்ளிக் கல்வி (நீதிமன்ற உத்தரவுகள்) விதிமுறை 2011, சிசிடிவி பதிவுகளைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் அரசு சுற்றறிக்கை (2023) ஆகியவற்றுக்கு மீறிய செயலாக கருதப்படுகிறது.
இது துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது என
சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
பெற்றோர் சண்முகத்தின் தெளிவுபடுத்தல்:
“எனது மகனை ஆசிரியை கண்டித்தது தவறில்லை. அது படிப்பு சம்பந்தமானது. நான் எவருக்கும் புகார் அளிக்கவில்லை. தலைமை ஆசிரியர் தவறாகப் புரிந்துகொண்டு புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை நான் கண்டிக்கிறேன். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சிசிடிவி வீடியோவைத் தவறாக வெளியிட்டு பழிவாங்கல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சண்முகம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், “பள்ளிகளில் சிசிடிவி பதிவுகள் மாணவர் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது தவறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இது போன்ற தவறுகள் தடுக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினர்.
ஏற்கனவே, வீடியோ வெளியிட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குமாறு தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான நடவடிக்கை தேவை
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (பிரிவு 66): தவறான தகவலைப் பரப்புவதற்கு 3 ஆண்டு சிறை அல்லது ₹5 லட்சம் அபராதம்.
பள்ளிக்கல்வி சுற்றறிக்கை (2024): சிசிடிவி தவறாகப் பயன்படுத்தினால் உடனடி விசாரணை, பதிலளிக்கும்படி நோட்டீஸ், தண்டனை.கல்வி உரிமைச் சட்டம் 2009: ஆசிரியர்-மாணவர் உறவைப் பாதிக்கும் செயல்களுக்கு குற்றவியல் நடவடிக்கை.
தர்மபுரி மாவட்ட கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள்
“சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்கள்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் பெற்றோர்கள் மனு அளிக்கவுள்ளனர்.
பெற்றோர்கள் இப்போது அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
துறை அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.














Leave a Reply