Categories

78 ஆண்டுகளுக்குப் பிறகு மலைக்கிராமங்களுக்கு பேருந்து வசதி! அரூர் அருகே கலசபாடி மக்கள் மகிழ்ச்சியில் திகைத்தனர்.

78 ஆண்டுகளுக்குப் பிறகு மலைக்கிராமங்களுக்கு பேருந்து வசதி!
அரூர் அருகே கலசபாடி மக்கள் மகிழ்ச்சியில் திகைத்தனர்

சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மலைக்கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்தது.


தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசபாடி, அரசநத்தம், நைனாவளைவு, புளியமரத்து வளைவு, கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி ஆகிய மலைக்கிராமங்களுக்கு கடந்த பிப்ரவரி 21 அன்று, தருமபுரி பொறுப்பு அமைச்சரும் வேளாண்மைத் துறை அமைச்சருமான 
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தார்ச்சாலையைத் திறந்து வைத்தார்.



இதைத் தொடர்ந்து, மார்ச் 3 அன்று அரூர் முதல் கலசபாடி வரை இரண்டு சிற்றுந்துகளை (மினிபஸ்) தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் மணி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் ஆகியோர் இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் சிற்றுந்துகளில் ஏறி, கலசபாடி மலையடிவார சாலைத் தொடக்கத்திலிருந்து மலைக்கிராமம் வரை பயணித்தனர்.
இந்தப் பேருந்து வசதி கிடைத்ததால், கலசபாடி உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் இனிப்புகள் வழங்கி, முதல் முறையாக சிற்றுந்துகளைப் பயன்படுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.