
கோவை மார் 19,குழந்தை கடத்தல் கும்பலா ? ;கோவையில் பச்சிளம் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்த வடமாநில பெண்கள் – குழந்தைகள் மீட்க நல மையத்தில் ஒப்படைப்பு !!!
கோவையின் முக்கியப் போக்குவரத்துச் சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளைச் கையில் வைத்துக் கொண்டு யாசகம் (பிச்சை) எடுத்து வந்த வடமாநிலப் பெண்களைச் சமூக ஆர்வலர்கள் பிடித்துப் குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் இல்லை என்ற அதிர வைக்கும் தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கோவை மாநகரின் கோவைபுதூர், மரக்கடை மற்றும் முக்கியச் சந்திப்புகளில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளைச் கையில் ஏந்தியபடி வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வந்தனர். வெயிலிலும், மழையிலும் குழந்தைகளை வைத்து அவர்கள் பிச்சை எடுப்பது பொதுமக்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நேதாஜி இளைஞர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அந்தப் பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து உள்ளனர். உடனே இது குறித்துக் குழந்தைகள் நல வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளன. அந்தப் பெண்கள் கையில் வைத்து இருந்த குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் கிடையாது என்பது தெரியவந்து உள்ளது.
இந்தக் குழந்தைகள் எங்கு கருந்து கொண்டு வரப்பட்டார்கள் ? கடத்தப்பட்ட குழந்தைகளா ? அல்லது பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டவர்களா ? என்பது குறித்துப் தீவிரமாக விசாரித்து நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது ….














Leave a Reply