Categories

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது அமைச்சர் ஶ்ரீநாத் சரத்குமார் பங்கேற்பு.

தூத்துக்குடி ஜூலை 27,தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறும். இந்த  திருவிழாவில் கலந்து கொள்ள வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த கொடியேற்றம் திருவிழா  மறை மாவட்டம் ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்ற திருப்பல்லியில் நடைபெற்றது. இந்த  கொடி ஏற்ற விழாவில் அமைச்சர் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஶ்ரீநாத் சரத்குமார்,தூத்துக்குடி மேயர் ஜெகன்,மாவட்ட ஆட்சியர் மகாராஜன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உட்பட பல கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இத்திருவிழா முன்னிட்டு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.