
கோவை செப் 25,
கோவை மாவட்டத்தில் இயலாதவர்களுக்கு உதவுவோம் என்ற உன்னத நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாரம் வாரம் வியாழக்கிழமை தினத்தில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் வழங்கி வருகின்றார் அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி.

அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அவர்களை தொழில் முனைவர்களாக உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கு பக்தி பொருட்கள் ஊதுபத்தி, கற்பூரம்,சாம்பிராணி போன்ற பொருட்கள் வாங்கி தந்து அவர்களை தொழில் முனைவராக்கும் முயற்ச்சியில் உம் ஈடுபட்டு வருகின்றார்.
மேலும் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கல்வி உதவி மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள அருந்ததியர் மடத்தில் வழங்க உள்ளதாக இவ் அறக்கட்டளைகள் நிறுவன தலைவர் பிரகாஷ் ரங்கசாமி தெரிவித்தார்.. இந்த வாரம் உணவு வழங்கும் போது இவ் அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜயலட்சுமி, மகேஸ்வரி, ரஞ்சிதம் கௌரிசங்கர், பானு,செந்தில் குமார், நிர்மலா தேவி ஆகியோர் உடனிருந்தனர் ன.















Leave a Reply