Categories

தவெக சூலூர் சட்டமன்ற தொகுதியில் உச்சம் தொடும் உட்கட்சி பூசல்


கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டையை தூர்வாரி, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த செப்.25-ம் தேதி குட்டையை தூர்வாரும் பணியை துவக்கி வைக்க சூலூர் தவெக எம்.எல்.ஏ. எம்.என்.சுகுமார் அங்கு வருகை தந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் எம்.எல்.ஏ. உடன் வந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது. 81b1

இதனால் பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமடைந்த பொதுமக்கள் சிலர் சட்டமன்ற உறுப்பினரை நோக்கி கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தினர். 81b1

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “70 ஏக்கர் குட்டை எங்கள் குடிநீர், விவசாய வாழ்வாதாரம். இதில் கழிவுநீரை விட்டால் நிலத்தடி நீரின் தன்மை மாறும்” என எதிர்ப்பு தெரிவித்தனர்.

*சமூக வலைதளங்களில் பரபரப்பு*

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.  “தவெக எம்.எல்.ஏ. மீது கல்வீசி தாக்குதல்” என்ற தலைப்பில் வீடியோ வெளியானது. மற்றொரு வீடியோவில் போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் காட்சிகள் வாகியுள்ளது



*உட்கட்சி பூசல்*

இதற்கிடையே சூலூர் தவெகவில் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.எல்.ஏ. சுகுமார் தனது ஆதரவாளர்களை கொண்டு முறையான தலைமை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தன்னை மாவட்ட செயலாளர் என போஸ்டர் அடித்து ஒட்டி வருவதால், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள பாபுவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைந்த 5 மாதங்களில் சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, தொழில் முதலீடு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், சூலூர் சம்பவம் ஆளும் கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.