Categories

இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு பின்னடைவா? விஜய் அலை இல்லை – கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்!*



*தாராபுரம் / மதுராந்தகம், அக்.3-*

தமிழகத்தில் அக்.6-ம் தேதி நடைபெற உள்ள தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இது மிகப்பெரிய பலப்பரீட்சையாக கருதப்படுகிறது.

*விஜய் அலை இல்லை – கருத்துக்கணிப்பு முடிவுகள்*

இடைத்தேர்தல் தொடர்பாக வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகளில், இரு தொகுதிகளிலும் விஜய் அலை இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதாகவும், “பணம் வாங்கிவிட்டு தான் ராஜினாமா செய்தார்கள்” என்ற புரிதல் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

– புதிய தலைமைச் செயலகம் தேவையா என்ற கேள்விக்கு 76 சதவீதம் பேர் தேவையில்லை என்றும், 18 சதவீதம் பேர் மட்டுமே தேவை என்றும் கூறியுள்ளனர்.
– முதல்வராக விஜய் தொடர்வதை 31 சதவீதம் பேர் மட்டுமே விரும்புவதாகவும், 59 சதவீதம் பேர் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
– ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என 49.2 சதவீதம் பேரும், பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என 39.8 சதவீதம் பேரும் கோரியுள்ளனர்.
– ரேஷன் பொருள் விநியோகம் மோசம் என 56 சதவீதம் பேரும், திட்டங்கள் செயலாக்கம் மோசம் என 59 சதவீதம் பேரும், சட்டம்-ஒழுங்கு மிக மோசம் என 72 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

*5 முனை போட்டி – தாவியவர்களால் சிக்கல்*

இந்த இடைத்தேர்தல் தவெக – திமுக – அதிமுக – நாம் தமிழர் – இடதுசாரிகள் என 5 முனை போட்டியாக மாறியுள்ளது. குறிப்பாக மதுராந்தகத்தில் கடந்த தேர்தலில் 9.57 சதவீத வாக்குகள் பெற்ற பா.ம.க. இந்த முறை அமைதி காப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

அதிமுகவில் வெற்றி பெற்று ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமாவுக்கு மீண்டும் சீட் கொடுத்தது தவெகவிற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

*அரசு ஊழியர்கள் அதிருப்தி – விலைவாசி உயர்வு எதிரொலி*

கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு ஆதரவளித்த அரசு ஊழியர்கள் சங்கங்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளன. இந்த இடைத்தேர்தலில் தங்கள் வாக்குகளை மீண்டும் திராவிட கட்சிகளுக்கு செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு இந்த இடைத்தேர்தலின் கதாநாயகனாக மாறியுள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த நடுநிலை வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

*சூலூரில் கல்வீச்சு சம்பவம்*

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையத்தில் குட்டையை தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க வந்த தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்.எல்.ஏ. மீது கூட்டத்திலிருந்து கல்வீசப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னை மாவட்ட செயலாளர் என போஸ்டர் அடித்ததால் தற்போதைய மாவட்ட செயலாளர் பாபு ஆதரவாளர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அக்.6 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்துள்ள நிலையில், தற்போதைய கள நிலவரப்படி தாராபுரத்தில் அதிமுக – திமுக இடையேயும், மதுராந்தகத்தில் திமுக – தவெக இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரு தொகுதிகளின் முடிவு, மீதமுள்ள தொகுதிகளில் கட்சி தாவி வந்தவர்களுக்கு சீட் வழங்குவதை தீர்மானிக்கும் என்பதால் தவெக தலைமை கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.