
கோவை அக் -6,
கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு துவக்கம், 14 படுக்கை வசதிகளுடன் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை மையத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நரம்பியல் நோய்களுக்கான 14 படுக்கைகள் கொண்ட நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் திறந்து வைத்தார்.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், பேசிய அமைச்சர் சம்பத் குமார், தமிழகத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைக்கான ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பலர் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விபத்து ஏற்படும் நிலையில் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானதாகும்
இந்த காலகட்டத்தில் உயிரைக் காக்கும் அவசர உயர் சிகிச்சை, அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்..
அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் கோவையில், மருத்துவத் துறையிலும் உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களை ராயல் கேர் மருத்துவமனை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது பெருமைக்குரியது என அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன், புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,நோயாளிகளின் நலன் கருதி,மருத்துவ துறையில் உள்ள , உலகின் முன்னனி தொழில் நுட்பங்களை கொண்டு வருவதில் ராயல் கேர் மருத்துவமனை இந்திய அளவில் முதன்மையான மருத்துவமனையாக இருப்பதாக அவர் கூறினார்..

இதனை தொடர்ந்து,நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் சிவக்குமார், 14 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இப்பிரிவில் வழங்கப்பட உள்ள சிகிச்சை வசதிகள் மற்றும் நவீன மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து விளக்கினார்.
விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என். எம்.சுகுமார்,மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி,சி.ஓ.ஒ.மணி செந்தில் குமார்,மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.














Leave a Reply