Categories

கோவையில்  அருந்ததியர் கல்சுரல் அகாடமி-யை பேராசிரியர் கனகசபாபதி இன்று  துவக்கி வைத்தார்.

கோவை மே 1,

அருந்ததியர் கல்சுரல் அகாடமி துவக்கு விழா சித்ரா பௌர்ணமி தினமான இன்று கோவை சித்தாபுதூரில் உள்ள மதுரைவீரன் கோவில் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய ஆராய்ச்சி கழகத்தின்  முன்னாள் தலைவர் , ஷியாம் பிரசாத் முகர்ஜி பவுண்டேசன் அகில இந்திய செயலாளருமான பேராசிரியர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த அமைப்பின் நோக்கம் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை பாதுகாத்து உலக மக்களுக்கு நன்மை அடைய செய்வதாகும்.

இந்த நிகழ்ச்சியின் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் துப்புரவு மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்நாடு செல்வம் , பாஜக பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் முருகேசன்,அதிமுக துப்புரவு பணியாளர்கள் தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் அரிப்புரம் ரவி , அருந்ததியர் கல்ச்சுரல் அகாடமி எ.அருண், சமூக ஆர்வலர்கள் வேல்ராஜ்,கண்ணன், மதுரை வீரன் கோவில் நிர்வாகிகள் வசந்த் , வினோத் , மணிவண்ணன் , கலைவாணன் , பூசாரி கபாலி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.