Categories

உள்ளாட்சி அரசு – காலை நாளிதழ் – எக்ஸ்க்ளூசிவ் – இடைத்தேர்தல் EXIT POLL – அதிரடி திருப்பம்!


*மதுராந்தகத்தில் தி.மு.க.வுக்கு சாதகம்! தாராபுரத்தில் அ.தி.மு.க.வுக்கு பலம்!*
*புது வாக்காளர்கள் மொத்தமும் த.வெ.க. பக்கம் – இளைஞர்களின் தீர்ப்பு என்ன?*
*வன்னியர் வாக்கு அ.தி.மு.க.வுக்கு… தலித் வாக்கில் தி.மு.க. vs த.வெ.க. நேரடி மோதல்!*
*வெற்றி வித்தியாசம் 2% தான் – யாருக்கு அதிர்ஷ்டம்?*
*வெளியூர் வாக்காளர்கள் வரவில்லை – வாக்குப்பதிவு 8% சரிவு!*

*சென்னை, அக்.7-*

தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் இரு தொகுதிகள்… மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. *உள்ளாட்சி அரசு காலை நாளிதழ்* நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கள ஆய்வில் பரபரப்பு உண்மைகள் வெளியாகியுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை அக்.9-ல் நடக்கவுள்ள நிலையில், எங்கள் குழு இரு தொகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நேரடி கள ஆய்வு செய்தது.

*வாக்குப்பதிவு ஏன் குறைந்தது?*

– மதுராந்தகம்: 85.99% (கடந்த பொதுத்தேர்தல் 93.22%)
– தாராபுரம்: 80.31% (கடந்த பொதுத்தேர்தல் 89.9%)

கடந்த பொதுத்தேர்தலில் சென்னை, கோவை, திருப்பூரில் இருந்து ஆர்வமாக வந்து வாக்களித்த புலம்பெயர்ந்த வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் வரவில்லை. இதுவே 8% சரிவுக்கு காரணம்.

*மதுராந்தகம் – எங்கள் கணிப்பு:*

1. *தி.மு.க. – முதலிடம்*
2. *த.வெ.க. – இரண்டாம் இடம் (மிக நெருக்கம்)*
3. *அ.தி.மு.க. – மூன்றாம் இடம்*

*உள்ளே என்ன நடந்தது?*
வன்னியர் சமூக பெரியவர்கள் வெளிப்படையாகவே “நாங்க அ.தி.மு.க.வுக்குதான் போட்டோம்” என கூறியுள்ளனர். ஆனால் அதே வீட்டில் உள்ள புது வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் அத்தனை பேரும் த.வெ.க.வுக்கு வாக்களித்துள்ளனர். தலித் வாக்குகளில் தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் சம பங்கு போட்டி. இதனால் தி.மு.க. மயிரிழையில் முன்னிலை.

*தாராபுரம் – எங்கள் கணிப்பு:*

1. *அ.தி.மு.க. – முதலிடம்*
2. *த.வெ.க. – இரண்டாம் இடம்*
3. *தி.மு.க. – மூன்றாம் இடம்*

கொங்கு மண்டலத்தின் பலமான கோட்டையான தாராபுரத்தில் அ.தி.மு.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் கடந்த தேர்தல் வாக்குகள் இம்முறை த.வெ.க.விற்கு மாறியதால், த.வெ.க. இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

*இறுதி அலசல்:*

ஆளும் கட்சிக்கு எதிரான அலை எதிர்பார்த்த அளவு வீசவில்லை. Vote Swing வெறும் 2 முதல் 3% மட்டுமே. எனவே வெற்றி தோல்வி என்பது 3000 முதல் 5000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் இருக்கும்.

நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் வாங்கும் 5% வாக்குகள்தான் இந்த இரு தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும்.

*அக்.9-ம் தேதி என்ன நடக்கும்? – உள்ளாட்சி அரசு தொடர்ந்து களத்தில் இருந்து தகவல் தரும்.*