
*அரூர், அக்.16-*
தருமபுரி மாவட்டம் அரூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பது குறித்து, அரூர் மின்வாரியம் சார்பில் தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அழகுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரூர் மற்றும் மொரப்பூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், சோலார் பேனல் எவ்வாறு அமைக்க வேண்டும், அரசு மானியம் எவ்வாறு பெறுவது, வங்கிக் கடன் பெறுவது, சோலார் பேனலை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
செய்தி ஆசிரியர்
பொ. இளம்பரிதி
9942030530













Leave a Reply