
*தருமபுரி, அக்.10*
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்.6-ம் தேதி நடைபெற்றது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.9) நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா(தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்ததால் இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
த.வெ.க. சார்பில் மீண்டும் இவர்களே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில்
*தருமபுரி மாவட்டம் அரூர் பஸ் ஸ்டாண்டில் த.வெ.க.வினர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பலமான பட்டாசுகள், சரவெடிகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்*
*இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்*














Leave a Reply