
தர்மபுரி நவ 18,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து, தண்ணீர் வசதியின்றி துர்நாற்றம் வீசும் அவல நிலையில் இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கழிப்பறைகளைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுவதால், மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட இயற்கை உபாதைகளுக்குக்கூட போதிய வசதியின்றி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சிதிலமடைந்த கழிப்பறைகளைச் சீரமைத்து, தண்ணீர் வசதியுடன் முறையாகப் பராமரித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Leave a Reply