Categories

பாலக்கோடு அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து – டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி


தர்மபுரி நவ 18,
தருமபுரி மாவட்டம்,  மாரண்டஅள்ளி அருகே உள்ள சாமனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (35), டிராக்டர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான டிராக்டரில் கோழி எரு ஏற்றிக்கொண்டு, அமானி மல்லாபுரத்தில் இருந்து பெலமாரனஅள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.


அப்போது செம்மனஅள்ளி அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பாலத்தின் மீது மோதி, அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்ற மோகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவ்விபத்து குறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.