Categories

அரூரில் விவசாயிகள் குறைதீர் முகாமில் ரீல்ஸ் பார்த்த அரசு அலுவலர்கள்: விவசாயிகள் அதிருப்தி


*தருமபுரி, அக்.10-*

தருமபுரி மாவட்டம் அரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியர் செம்மலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார்கள், வேளாண்மை, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர்.



*விவசாயிகள் புகார்:*

பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
வனவிலங்குகளால் பயிர் சேதம் – இழப்பீடு வழங்க வேண்டும்.
பட்டா மாறுதல், சிட்டா பெயர் மாற்றத்தில் தாமதம்.
உரம், விதை தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



விவசாயிகள் தங்கள் குறைகளை கோட்டாட்சியரிடம் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற சில அரசு அலுவலர்கள் தங்கள் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தனர். இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறைதீர் முகாமை முறையாக நடத்தாமல் அலட்சியமாக செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.