
பென்னாகரம், அக்.29:*ன
பென்னாகரம் வட்டாரம், மாதேஅள்ளி கிராமத்தில் வேளாண்மைத் துறை – அட்மா திட்டத்தின் சார்பில் உள்மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் திருமதி.வெண்ணிலா கலந்துகொண்டு, ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு சமச்சீர் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தோட்டக்கலை பேராசிரியர் திருமதி.இந்துமதி, தோட்டக்கலை பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கி பேசினார்.
இயற்கை விவசாயி மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் தனசேகரன், இயற்கை உரங்கள் தயாரிப்பு முறைகள் குறித்தும், மண்புழு உரம் தயாரிக்கும் செயல்முறை குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி அலுவலர் திருமதி.கோகிலா, வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் அசோக்குமார் பேசுகையில், அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கியதுடன், விவசாயிகள் அரசின் மானியத் திட்டங்களை பெற தங்கள் நில உடைமைகளை ஆதார் எண்ணுடன் இணைத்து விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை (Farmer ID) பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திருமதி.அஸ்வினி மற்றும் திருமதி.கலைபிரியா ஆகியோர் செய்திருந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.














Leave a Reply